Tuesday, 31 December 2013

வருத்தப்படும் வாலிபர் சங்கம்...!!!!



நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலன்னா, சினிமாவுல இந்த அமெரிக்க மாப்பிள்ளைங்க தொல்ல அதுக்கும் மேல. ஹீரோ கையில மிக்சர் சாப்பிடவே, அமெரிக்காவுல இருந்து பிசினஸ் க்ளாஸ்ல ஃப்ளைட் ஏறி வாரானுங்க இந்த பூம்பழம் ஃபேஸ்காரனுங்க. 7ஓ க்ளாக் பிளேடுல ஷேவ் பண்ணி, ஐஸ்ல வச்ச ஆப்பிள் மாதிரி இருந்தாலும், இந்த ஸ்லீவ்லெஸ் சிங்காரிஸ், அழுகுன அன்னாசி பழம் மாதிரி இருக்குற ஹீரோ மூஞ்சைத்தான் லவ் பண்ணும்னு பைக் பாஸ் போடுறவர்ல இருந்து உள்ள பாப்கார்ன் விக்கிறவர் வரை எல்லோருக்கும் தெரியும்.

ஆனாலும், ஓவர் டைம் பார்த்து சம்பாதிச்ச டாலர்ல இவனுங்க, ஹீரோயினுக்கு டாலர் வச்ச நெக்லஸ் வாங்கிக்கொடுத்து மனச தேத்துறானுங்க. ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்ல செட் தோசை வாங்கிக் கொடுத்து உடம்பயும் தேத்தி விடுறானுங்க. கல்யாணத்துக்கு பட்டு சேலைல ஆரம்பிச்சு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போட் ஹவுஸ் வரை புக்கிங் பண்ணி வச்ச பிறகும் இவனுங்க பண்ற தியாகத்த, தியாகம் பண்றதுல டிகிரி வாங்கின ஏவிஎம் ராஜனும் முத்துராமனும் கூடப் பண்ணியிருக்க மாட்டாங்க. இதுவரை இந்த அமெரிக்க மாப்பிள்ளைகள் செய்யாதது ஒண்ணே ஒண்ணுதான். ஹீரோயினுக்கு குழந்தை பொறந்து மொட்டையடிக்கிறப்ப, மாமான்னு சொல்லி மடில உட்கார வச்சு மொட்டையடிக்காம இருக்கிறதுதான் அது.

பதினெட்டுபட்டில ஒத்த பெட்ரோமாக்ஸ் லைட்ட வச்சிருந்த மகான் கவுண்டமணி கூட அந்த பந்தா காட்டல. ஆனா, இந்த பொண்ண பெத்தவனுங்க காட்டுற பந்தா இருக்கே... அய்யய்யையோ! கல்யாண வயசுல பொண்ணுதானே வச்சிருக்கானுங்க... என்னமோ பத்துப் பதினஞ்சு பெட்ரோல் கிணறு வச்சிருக்கிற ரேஞ்சுல பில்டப் தர்றானுங்க. விவசாயம் பண்ணினா பொண்ணு தர மாட்டாங்களாம், பிரைவேட்ல வேலை செஞ்சா பொண்ணு தர மாட்டாங்களாம், பொண்ணை விட பையன் படிப்பு கம்மியா இருந்தா பொண்ணைத் தரமாட்டாங்களாம். ஏன்யா, அஞ்சாவது படிச்சவங்க அமைச்சராவே ஆகறப்ப, பத்தாவது படிச்சவன் புருஷனாகக் கூடாதா?

பொண்ணே கிடைக்க மாட்டேங்குதுன்னு அவனவன் சாப்பிடாம கிடக்கான்... இதுல மாப்பிள்ளை வீட்டுக்காரனுங்க சில பேரு ஓவர் பத்தா காட்டுறானுங்க. டேய், வாய்க்கு ருசியா சமைக்கிற பொண்ணு வேணும்னு எல்லாம் தேடாதீங்கடா. இப்பல்லாம் பொண்ணுங்க சமைச்சு புருஷனுக்கு எங்க போடுறாங்க? சமைச்சதை போட்டோ எடுத்து பேஸ்புக்லதான் போடுறாங்க. பொண்ணு கண்ணுக்கு லட்சணமா வேணும்ன்னுலாம் வெளிய சொல்லாதீங்கய்யா... திருப்பி பொண்ணுங்களும் அதே மாதிரி ஆசைப்பட்டா நம்ம மரியாதை போயிடும். நானெல்லாம் பொண்ணு பார்க்கப் போனப்ப, பொண்ணுகிட்ட தனியா பேசச் சொன்னாங்க... வேணாம்னுட்டேன். இப்போ அதுக்கும் சேத்து தனியாத்தான் பேசிக்கிட்டு இருக்கேன்.

``இன்பமே துன்பம்`` - இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!




   
இன்பமே துன்பம்:-

நாம் நினைப்பது நடக்கவில்லை. விரும்பியது கிடைக்கவில்லை; சொல்லியவைகளை மற்றவர்கள் செய்து முடிக்கவில்லை. அப்போது உண்டாகும் மனநிலை கோபம், ஏமாற்றம்தான். அதன் தொடர்ச்சியாய் துன்பம். விரும்பிய உணவைச் சாப்பிடுகிறோம். இன்பமாக உள்ளது. அளவு முறை தெரியாமல் சாப்பிட்டால் அஜீர்ணம். வயிற்றுவலி, மலச்சிக்கல் எனத் துன்பப்படுகிறோம். தட்ப வெப்ப நிலை மாறுகிறது! உடல் நலம் குறைகிறது; துன்பமடைகிறோம். மற்றவர்களது பேச்சும், செயலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத போது பெறும் மனநிலை துன்பம்.

மிக அரிதான ஒரு பொருளைத் தேடிப்பிடித்து, பெரும் விலை கொடுது வாங்கி உபயோகித்து வருவோம். அதுபோன்ற பொருள் திடீரென விலை குறைந்து விட்டால், அடடா நாம் அதிகம் கொடுத்து ஏமாந்து விட்டோமே அவசரப்பட்டு வாங்கிவிட்டோமே? எனப் பலவாறு எண்ணுவோம். வாங்கியபின் இதுவரை அதை உபயோகித்ததை மறந்துவிடுவோம். வைத்திருந்த பணம் அல்லது பொருள் நம்மிடம் வாங்கியவர்கள் அதைத் திருப்பித் தராவிட்டாலும் வருத்தப்பட்டு துன்பமடைகிறோம். பலவிதமான போட்டிகளில் கலந்து கொள்கிறோம். வெற்றி பெற்றால் இன்பம் அடைகிறோம். இல்லையென்றால் துன்பப்படுகிறோம்.

ஆராய்ந்து பார்த்தால் அளவுமுறை அதிகமானால் பெறும் உணர்வே துன்பம் என்று அறியலாம். அளவுக்குள் இருந்தால் இன்பம் சிறு உதாரணம் மூலம் பார்ப்போம். நியாயமான தேவைகளை நிறைவேற்றுமளவு பொருளாதார வசதியுள்ளது. அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி இன்பம் அடைகிறோம். அளவுக்கு மீறிய சொத்து அல்லது பொருளாதார வசதி உள்ளது என்றால், அவைகளைப் பாதுகாத்தல் ஒருபுறம்; பராமரித்தல் மறுபுறம் என சிரமப்படும் நிலை உண்டாகும். நியாயமான வழிகளில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.

பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநிலங்களில் விமானநிலைய விரிவாக்கத்தால் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றனர். வங்கியில் டெபாசிட் செய்தால், வரி செலுத்த வேண்டும் என்பதால், வீடுகளிலேயே பல இடங்களில் வைத்து பாதுகாத்தனர். வருமான வரித்துறையினர் சோதனையிட்டு, கண்டுபிடித்து, வரி வசூலித்து, மீதித் தொகையை எப்படி பாதுகாப்பதென ஆலோசனை கூறிய செய்தி நாளிதழ்களில் வந்தது. பணத்தை வீட்டில் வைத்து பாதுகாத்து துன்பமடைந்தனர். பணமும் இருந்தது. பயமும் இருந்தது. நடந்தது நடந்தது தான். ஒரு செயல் செய்கிறோம். அதனால் ஒரு பலன் கிடைக்கிறது. அது நாம் விரும்பியவாறு இருந்தால் மகிழ்கிறோம். இல்லாவிட்டால் வருத்தப்படுகிறோம். இதை நினைவில் கொண்டால் இனிவரும் காலங்களில் செய்யும் இது போன்ற செயல்களில் உஷாராக இருந்து நமக்கு எந்தவிதமான முடிவு வேண்டுமோ அதற்கேற்ப செயல்படுவோம். முன்னர் செய்த செயலையோ அதனால் பெற்றபலனையோ மாற்ற முடியாது. அதை ஒரு படிப்பினையாக கொள்ளலாம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள், நடந்ததை நினைத்து வருத்தப்பட்டே துன்பம் அடைகிறோம். சுயபச்சாதாபம், கழிவிரக்கம் எனப்பலவாறு இதைக் கூறலாம். இந்த மனநிலை நம் வாழ்க்கையில் தன்னம்பிக்கையைக் குறைப்பதோடு, நம்மையும் பலவீனமாக்கிவிடும். நடந்தவைகள், நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவைகள், நல்லவையாக நடக்கட்டும். எனப் பெரியவர்கள் கூறியதை நினைவில கொள்ள வேண்டும், இல்லாவிட்டால, புலம்பல் மன்னர்களாகி விடுவோம்.

நடந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால், நிகழ்காலத்திலும் வீட்டில் உள்ளோரிடம் சுமூகமான உறவு இருக்காது; ஏதாவது குறை கண்டு எரிந்து விழுவோம். நல்ல கண்ணாடி என்றால் உருவத்தை உள்ளவாறு பிரதிபலிக்கும். தரமில்லாத கண்ணாடி எனில், கோணல் மாணலாக உருவத்தை பிரதிபலிக்கும். ஆக, நாம் நடந்ததை நினைத்து நீண்ட காலம் வருந்தினால் தரமில்லாத மனிதர்களாகிவிடுவோம்.

தரமுள்ள மனிதன்

இதற்கு ஏதேனும் அளவுகோல் உள்ளதா? ஆடு, மாடு போன்றவைகளைச் சந்தைகளில் வாங்குபவர்கள் ஒரு சில சோதனைகளை செய்து திருப்தியடைந்த பின், அதற்கேற்றவாறு விலை கூறி வாங்குவர். அதுபோல, நம் மனித வாழ்வில் ஒவ்வொருவரையும் எப்படித் தரம் பிடிப்பது? திருவள்ளுவர் கை கொடுக்கிறார்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.


எச்சம் என்பது நமது வாரிசுகளல்ல. நமக்குப் பின், அதாவது நமது மறைவுக்குப் பின் என்றும் கூறலாம். நம்மிடம் கூறுவதற்கு சங்கடப்பட்டு நாம் ஓரிடத்திலிருந்து அகன்றபின் நம்மைப் பற்றிப் புகழ்ந்தோ, பழித்தோ கூறுவது ஒவ்வொருவரைப் பற்றியும் பலரும் பலவிதமாகக் கணித்து வைத்திருப்பர்.

இவர் கஞ்சன், பரோபகாரி, நியாயமான நபர், அடாவடித்தனத்துக்கு பெயர் பெற்றவர். சோம்பேறி, சிடுமூஞ்சி, சுறுசுறுப்பானவர், நேரம் தவறாதவர், சொன்னதைச் செய்பவர். கறார் மனிதர் எனப்பல பெயர்களை ஒருவரே கூடப் பலரிடம் பெறுமளவு நடவடிக்கைகளை இருக்கும். ஆனாலும் நாம் அதிகம் தொடர்பு கொள்ளும் மனிதர்கள் யார்? நம் குடும்ப உறுப்பினர்களும உடன் வேலை பார்ப்பவர்களும்தானே! இவர்களிடம் நம் அணுகுமுறை, பழக்கம எப்படி உள்ளது என்பதுதான் முக்கியம்.

ஒவ்வொரு பொருளுக்கும் தரத்தை சோதனை செய்து ISI முத்திரை இடுகின்றனர். மனிதனின் தரத்துக்கு சோதனை உண்டா? உண்டு. இதோ தரத்துக்கான சில சோதனைகள்.

திட்டமிட்ட செயல்பாடுகள்
அன்பான அணுகுமுறை
மற்றவர்கட்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது
அனுசரித்து விட்டுக் கொடுப்பது
பிறர் மனம் புண்படாமல் பேசுதல்
பிறர் தன்னிடம் எப்படி இருக்க வேண்டும்
என எண்ணுகிறாரோ, அதே போல்
மற்றவர்களிடம இருப்பது

இதுபோல் பல கூறலாம்.

தேவை மாற்றம்
மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால், மிருக உணர்வுகளில் இருந்து மனித நேயத்தை உணரவே பெரியோர்கள் தோன்றி உபதேசிக்க வேண்டியிருந்தது என்பதை அறியலாம். அவர்கள் மனிதருள் மாணிக்கமாய் ஒளி வீசுகின்றனர். தம் சேவையில் என்றும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களது வாழ்க்கைமுறைகளைப் படித்துப் பார்த்தால், அவர்கள் அடைந்த துன்பங்கள், அவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகள் போன்றவைகள் தெரியவரும். இவ்வளவு துன்பங்களுக்கிடையிலும், எப்படி அவர்களால் சாதிக்க முடிந்தது என பிரமிப்போம். உடல் குறைபாடுகளுடன் சாதனை புரிந்த ஹெலன் கெல்லர், வறுமையிலும் சாதனை புரிந்த பெர்னாட்ஷா, தாமஸ் ஆல்வா எடிசன் எனப் பலரைக் கூறலாம். நம் வாழ்நாளில் பலரையும் பார்த்திருப்போம்.

எளிமையாக வாழ்ந்து, பொது சொத்துக்கு ஆசைப்படாமல் நல்லாட்சி செய்த கர்மவீரர் காமராஜர், கடும் உழைப்பால் முன்னேறிய G.D. நாயுடு, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பளித்து அகில உலக அளவில் தங்கள் உறபத்திப் பொருட்களை விநியோகிக்கும் சக்தி மசாலா துரைசாமி சாந்தி போன்ற பலரைக் கூறலாம்.

நமது ஒவ்வொரு எண்ணமும், பேச்சும் செயலும் நம்முள் உறைந்துள்ள இறைநிலையான உள்ளுணர் அறிவால் தரம் பிரித்து நமக்கு அறிவிக்கப்படுகின்றன. அதனை ஏற்று செயல்பட்டால் துன்பமே கிடையாது. ஆனால், குறுகிய நோக்கத்தில், தற்காலிக இன்பத்துக்காக, விரைவில் வசதிகளைப் பெருக்க வேண்டுமென இந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தி செயல்படுகிறோம். அதனால், பலர் உடனே இன்பமும் அடைவர்; ஆனால், அவை நீடித்த இன்பமல்ல. கடுமையான குளிரில் சிறு நெருப்பு கதகதப்பைத் தரும்; நெருப்பு அதிகரித்தால் வெப்பம் தாங்கமுடியாது; ஒரு தொலைவுக்கு அப்புறம் இருப்பதே பாதுகாப்பு. ஆனால், பணம், புகழ், புலன் இன்பம் இவற்றுக்கு நாம் எவ்விதமான தூரத்தையும் நிர்ணயிக்க மறந்து விடுகிறோம்.

தீயவை தீய பயத்தலால், தீயவை தீயினும் அஞ்சப்படும்; அதேபோல், பிறருக்கு துன்பம தரும் செயல்களை மறந்துகூட நினைக்கக்கூடாது. அப்படி எண்ணினாலே, எண்ணியவை அந்தத் துன்பமானது பிடித்துக்கொள்ளும் என பொய்யாமொழி மொழிந்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.

சில குறிப்புகள்

பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம்; முழுமையான தகவல் தெரியாமலேயே ஒரு செயலைச் செய்வது; அல்லது பிறருடன் பழகுவது. எனவே, எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும், அச்செயலைச் செய்து முடிப்பதற்குத் தேவையான தகவல்கள், இடையில் சந்தேகம் ஏற்பட்டால் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் போன்றவைகளை அறிந்தபின் செயல்பட்டால் நம் வாழ்க்கை துன்பமில்லாததாக அமையும்.

புதிய நபர்களுடன் பழகும்முன் நம் ஆழ் மனதில் அவர்களுடன் பழகலாமா, வேண்டாமா என ஒரு கேள்வியைப் போட்டு விடை பெற்றபின் பழக்கத்தை நட்பாக மாற்றுவது துன்பம் தராது. தேவையெனில் நம் நலனில் அக்கறையுள்ளவர்களுடன் கலந்து பேசி, கருத்தறிந்து முடிவு செய்யலாம்.

எல்லோரையும், எல்லா நிகழ்வுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலை பெறவேண்டும். எந்தப் பொது நிகழ்வும் நமக்காக மட்டுமே நடப்பதில்லை. (உ-ம்) மழை, வீட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் தடை, மின்தடை, பஸ் ஓடாத நிலை, விலைவாசி உயர்வு போன்றவை. ஆனால், நம் வீட்டில் மட்டும் தடையென்றால், உடனே செயல்பட்டு, புகார் செய்து சரிசெய்ய வேண்டும். நம் வீட்டுக் குழாய் பழுதானால் நமக்கு மட்டும் குடிநீர் வரவில்லையென்றால், உடனே சரிசெய்ய வேண்டும். பொதுவாக மற்றவர்களை மாற்ற முடியாது. ஆனால், வாழ்க்கை முழுவதும் நம்முடன் இணைந்து பயணிப்போர்களை நமது மனமாற்றத்தால் நாம் விரும்பியவாறு மாற்றமுடியும். அதற்கு அடிப்படைத் தேவை நமது மாற்றமே. இவ்வாறு செயல்பட்டால் இனி, எஞ்சிய காலத்தில் வாழ்க்கையைத துன்பமில்லாமல் வாழ முடியும். இன்பம் பெற தேவையான வசதிகள், அதன் அளவு முறைகள் இயற்கை வழங்கிய வாய்ப்புகளை இனி காண்போம். வாழ்க வளமுடன்!

ஆஸ்திரேலியாவில் அருள்பாலிக்கும் ஐந்து கரத்தோன்...!




தலவரலாறு:

 ஆஸ்திரேலியாவின் அடிலைடு மாநிலத்தில், ஸ்ரீ கணேசர் ஆலயம் அமைந்துள்ளது. இந்துக்களுக்கான வழிபாட்டு தலம் அமைப்பதற்காக, 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ஆஸ்திரேலிய இந்து சமூக கூட்டம் நடைபெற்றது. இந்துக்களின் வழிபாட்டு தலத்திற்கு எளிதில் அனுமதி பெறுவதற்கு ஏதுவாக இருப்பதற்காக, ஓக்லான்ட்ஸ் பார்க்கிலுள்ள உபயோகமற்ற கிறிஸ்தவ தேவாலயத்தை வாங்க வேண்டும் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், அக்கோயிலை, இந்துமத தத்துவங்களைப் போதிப்பதற்கும் கலாச்சாரம், இந்திய மொழிகள் மற்றும் பள்ளிப் பாடத்திட்டத்தில் போதிக்கப்படாத, அதனுடன் தொடர்புடைய பிறவற்றையும் போதிக்கும் இடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஸ்ரீ கணேசர் ஆலயத்தில், விநாயகர் சிலை மட்டுமே பிரதிஷ்டை செய்து, அவரையே முக்கிய தெய்வமாக வழிபடுவதாகவும் முதலில் முடிவெடுக்கப்பட்டு, 1986ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி கோயிலைச் சீரமைத்து, 1998ம் ஆண்டு ஜூன் மாதம், புதிய கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோயிலுக்கான திட்டவரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தவர், இந்தியாவின் முதன்மை கட்டிடக்கலை நிபுணரான நாகராஜன் ஆவார். இக்கோயிலில் உள்ள தெய்வங்களின் விரிவான வடிவத்தைச் சித்தரித்தவர், ராஜலிங்கம் என்பவர் ஆவார். சிட்னியிலுள்ள முருகன் கோயிலும் இவரால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்து சமூகத்தாரின் முழு ஒத்துழைப்பு மற்றும் பொருளுதவியால் வெகு விரைவில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. பெரும் சிரமங்களைக் கடந்து, கட்டி முடிக்கப்பட்ட இக்கோயில் ஆஸ்திரேலியவாழ் இந்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது. புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட கோயிலின் மகா கும்பாபிஷேகம், 2000ம் ஆண்டு நவம்பர் 6லிருந்து 9ம் தேதி வரை வெகு சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முக்கிய தெய்வங்கள்: பாரம்பரியம் மிக்க, சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், கணேசர், முருகன், லட்சுமி நாராயணர், சிவலிங்கம், பைரவர், ஹனுமன் மற்றும் துர்க்கை அம்மன் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வெண்கலத்தால் ஆன மூலவர் சிலைகள், சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. மார்பிள் கற்களால் ஆன சிலைகள், வட இந்திய முறைப்படியும், கிரானைட்டால் ஆன சிலைகள், தென்னிந்திய முறைப்படியும் அமைக்கப்பட்டுள்ளன. மார்பிள் மற்றும் கிரானைட் ஆகிய இரண்டாலும் உருவாக்கப்பட்ட சிலைகள் ஒரே கோயிலில் அமைந்திருப்பது அரிதான ஒன்றாகும்.

முக்கிய திருவிழாக்கள்: விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, தைப்பூசம், கந்தசஷ்டி, நவராத்திரி, ஹனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, பங்குனி உத்திரம் போன்றவை இக்கோயிலின் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

கோயில் நேரங்கள்: திங்கள் முதல் வியாழன் வரை - காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை, இரவு7.00-8.00 மணி வரை; வெள்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் 8.00 வரையிலும், இரவு 7.00 - 9.00, சனிக்கிழமை-காலை 7.00 முதல் 8.00 வரை, இரவு 7.00 முதல் 8.00 வரை; ஞாயிறு காலை 10.30 முதல் 1.00 வரை, மாலை 6.30- இரவு 8.00 வரை.

குழந்தைபேறு தரும் எலுமிச்சை....!!!




கொங்குநாட்டில் பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தவன் `கோணவராயன்' என்ற குறுநில மன்னன். அவனது ஆட்சி கட்டுப்பாட்டில் இருந்து வந்த நம்பியூரில் பழமைமிக்க பல திருக்கோயில்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான், பட்டத்து அரசி அம்மன் கோயில். இக்கோயில் தோன்றிய வரலாறு தெளிவாக இன்னும் அறியப்படவில்லை என்றபோதும் செவி வழிச் செய்தியாகப் பல தகவல்கள் சொல்லப்படுகின்றன.


ஒருசமயம், திப்புசுல்தானின் படை வீரர்களால் இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. போரில் நம்பியூரையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் அப்போது ஆட்சி செய்து வந்த பட்டத்து அரசியான மருதம்மா உயிர் நீத்தாள். அந்த அரசியின் வீரத்தை நினைவுகூரும் விதமாக, அங்குள்ள கோயிலில் அருளாட்சி புரிந்து வந்த அம்மனுக்குப் `பட்டத்து அரசி அம்மன்' என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.


போர் நடைபெற்றபோது படைகளைத் தலைமை தாங்கி நடத்திய அரசியையே `படைத்தலைச்சி அம்மன்' என்று பிற்காலத்தில் மக்கள் வணங்க ஆரம்பித்ததாகவும், அந்த அம்மனே இன்று பட்டத்தரசி அம்மன் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. கோயிலின் முன்னே விநாயகருக்கு தனி சன்னதி இருக்கிறது.


உள்ளே கன்னிமார் சிலைகள் மலர்ச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரதி வாரம் வெள்ளி, திங்கள் கிழமைகள் இங்கே விசேஷமானவை. மிகப் பழமை வாய்ந்த பட்டத்து அரசி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்கு, அன்னையின் சூலத்தில் குத்திய எலுமிச்சங் கனியை பூசாரி கொடுத்து, பிழிந்து உண்ணச் சொல்வார்.


பல தம்பதிகளுக்கு இதனால் குழந்தைப்பேறு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். கோபி செட்டிபாளையத்திலிருந்து கோவை செல்லும் பேருந்துப் பாதையில் 18 கி.மீ. தொலைவில் நம்பியூர் பாரதிநகரில் உள்ளது பட்டத்து அரசி அம்மன் கோயில்.

7-ம் அறிவு படம் பாத்திருந்தா இது உங்களுக்கு புரியும்...?



நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த செயல்களும் பழக்க வழக்கங்களும் மிகவும் ஆராய்ந்து அறிவுபூர்வமாக ஏற்படுத்தப்பட்டவையே.நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட மெய்ஞ்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம்  அப்படி நிரூபிக்க நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பல நல் வழக்கங்களில் ஒன்றை மட்டும் உதாரணமாக இங்கே எடுத்துக்கொண்டு அலசுகிறேன். இதே போல் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து செயல்களிலும் பழக்கவழக்கங்களிலும் விஞ்ஞானம் கலந்தே இருக்கிறது என்பதை இந்த ஒரு உதாரணத்தினால் விளக்க முற்பட்டிருக்கிறேன்.


மெய்ஞ்ஞானம்தான் விஞ்ஞானம், விஞ்ஞானம்தான் மெய்ஞ்ஞானம் என்பதைக் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது, அதைக் கண்ணேறு படுதல் என்று நம் முன்னோர்கள் கூறுவர். அந்த திருஷ்டி கழிய, சுற்றிப் போடுதல் அல்லது திருஷ்டி கழித்தல் என்று ஒரு வழக்கத்தை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர் அதை ஆராய்ந்தால் கொஞ்சம் கல் உப்பு எடுத்து அதோடு மிளகாய் வற்றலையும் கையில் வைத்துக்கொண்டு நம்மை நிற்க வைத்து அந்த உப்பை வைத்து நம்மைச் சுற்றிவிட்டு அந்த உப்பையும் காய்ந்த மிளகாயையும் எரிகின்ற நெருப்பில் இடுவார்கள்.


அந்த உப்பு நெருப்பில் பட்டவுடன் வெடிக்கும்; காய்ந்த மிளகாய் கருகி மிளகாய் நெடி மூக்கைத் தாக்கும். இந்த நிகழ்வில் உப்பும் காய்ந்த மிளகாயும் பஞ்ச பூதங்களாகிய நெருப்பில் இணைந்து ஒரு விதமான ரசாயனக் கலவை ஏற்பட்டு அந்த வேதிய மாற்றம், நமக்கு இருக்கும் வியாதிகளைப் போக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல; விஞ்ஞானப் பிரகாரம் உப்பும் காய்ந்த மிளகாயும் நெருப்பும் சேர்ந்த கலவையான மணம், நம் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.


கொஞ்சம் சுண்ணாம்பு, மஞ்சள் இரண்டையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் கலக்கும்போது மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்து ஒரு சிவப்பு நிறத்தை அந்தத் தண்ணீருக்கு அளிக்கும்; அந்தச் சிவப்புத் தண்ணீர் கலப்பதால் ஏற்படும் வேதிய மாற்ற விளைவுகளால் நம் நோய்கள் தீரும் என்றும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்.அதேபோல இந்த இரண்டு செயல்களிலும் ஏற்படும் வேதிய மாற்றத்தால் விளையும் மணம், பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய காற்றில் கலந்து, நம் நாசியில் புகுந்து நமக்குக் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.அதே போல கிராமங்களில் வீட்டு வாயிலில் மார்கழி மாதங்களில், அல்லது அனைத்து மாதங்களிலுமே சாணம் தெளித்து வைப்பர்.


பசுமாட்டின் சாணம் ஒரு உயர்தரமான கிருமி நாசினி, இந்தக் கிருமி நாசினி, பசுமாட்டின் சாணத்தைப் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மேல் தெளிப்பதால் ஏற்படும் வேதிய மாற்றங்களினால் ஏற்படும் வெளிப்பாடாகிய ஒரு விதமான மணம் கிருமிகளிடமிருந்து ஒரு கவசம் போல் நம்மைக் காக்கிறது.


அதே போல பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் காற்றின் மூலமாகக் கலந்து ஏற்படும் வேதிய மாற்றங்கள் நம்மை பாதிக்கின்றன, அல்லது காக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!ஆகாயத்தில் இருக்கும் மேகங்களிலிருந்து பெய்யும் மழை, நமக்கு மிகவும் சுத்தமான குடிநீரையும் அளிக்கிறது; பயிர் செழித்து வளரத் தேவையான இயற்கைச் சத்துகளைப் பூமியிலிருந்து காற்றின் மூலமாகவும், சூரிய வெப்பத்தால் தண்ணீர் நீராவியாக மாறும்போது, அந்த நீர் ஆவியாகி அந்த ஆவியோடு பூமியிலுள்ள இயற்கையான பல சத்துகள் தாமாகவே கலந்து அந்தச் சத்துகளும் நீராவியோடு ஆகாயத்தில் சென்று மேகமாக உருக்கொண்டு, மீண்டும் அங்கே ஏற்படும் குளிர்ச்சியான சூழலால் மழையாக மாறும் வேதியியல் விந்தையால் நீராக, சுத்தமான நீராக மாறி மழையாகப் பொழிகிறது.


ஆகவே பஞ்ச பூதங்கள் என்று மெய்ஞ்ஞானிகளாலும் ஐந்து வகை சக்திகள் என்று விஞ்ஞானத்தாலும் ஒப்புக்கொள்ளப்படும் இந்தப் பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகும் ஜீவராசிகளுக்கு இந்தப் பஞ்ச பூதங்களின் சக்திகள், எப்போதும் உதவுகின்றன என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே மக்களுக்கு விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாது என்றுணர்ந்து விஞ்ஞானத்தையே மெய்ஞ்ஞானம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவர்கள் பாமரர்களா அல்லது விஞ்ஞானம் வளர்ந்த இந்த நிலையிலும் இவை எல்லாவற்றையும் அதாவது நம் மெய்ஞ்ஞானமே விஞ்ஞானம் என்றுணராமல் இருக்கும் நாம் பாமரர்களா என்று எண்ணி வியப்படைகிறேன்.


ஆகவே இன்றைய முன்னேற்றமான விஞ்ஞானத்தின் அடிப்படை, அன்றைய மெய்ஞ்ஞானமே என்பது அசைக்க முடியாத உண்மை. மெய்ஞ்ஞானம் எதைக் கடவுள் என்று சொல்லுகிறதோ அந்தக் கடவுளை விஞ்ஞானம் இயற்கை என்று சொல்லுகிறது.இயற்கையோடு இணைந்து வாழ்வோம், அதே நேரத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து நல் வழக்கங்களையும் பழமை என்று ஒதுக்காமல் அவர்கள் கூறிய மெய்ஞ்ஞானத்தில் அந்தக் காலத்திலேயே எப்படி அவர்கள் அவற்றை முறையாக ஆராய்ந்து, விஞ்ஞானத்தை உட்பொருத்தி வைத்திருந்தனர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அவற்றில் உள்ள நன்மைகளை அடைவோம்.


ஆகவே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த நல் வழக்கங்களையும் இயற்கையையும் நம்பி வாழக் கற்றுக்கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது.

ஆய்வுக் கட்டுரை... காதலும் உங்கள் ராசியும்(12 ராசிகளுக்கும்)....




மேஷம்


இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.


கடகம்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி


கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை

கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு


இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்


மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர்.

இல்லத் தரசிகளுக்கு....




இல்லத் தரசிகளுக்கு....

பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

 * மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

 * தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

 * வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

 * தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

  * சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

  * வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

  * காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

  * குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

  * நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்­ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

  * சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

   * வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

 * பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

  * வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

  * தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்­ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

  * இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

  * வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

  * ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

  * கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

  * வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

  * பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

  * ஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

  * இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

  * காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

  * கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

  * தண்­ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

  * முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

  * உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

தோல்வி என்றால்.....?



தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல:நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.


தோல்வி என்றால்,நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல: சில பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.


தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் இல்லை:முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.


தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு இல்லை என்று பொருள் அல்ல:வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.


தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை:மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.


தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல:இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.


தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல: அடையக் கொஞ்சம் தாமதமாகலாம் என்று பொருள்.


தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை:உங்களுக்கு வேறு நல்ல எதிர் காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார் என்று பொருள்.

மகளிர் பெண்களே இப்படி சமாளியுங்க…!




மகளிர் பெண்களே இப்படி சமாளியுங்க…!

`உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்று பழமொழி சொல்வார்கள். பெண்களுக்கு இந்த சொலவடை நிச்சயம் பொருந்தும்.

புதிதாக மணம் முடித்து கணவர் வீட்டில் காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் `கடி’கள், ஏச்சு பேச்சுகள் அவர்களின் மனதை ரொம்பவே துடிக்க வைத்து விடும். அப்படிப்பட்ட நிலைமையை எப்படி சமாளிப்பது? இங்கே சில ஐடியாக்கள்…

`இந்த வீட்ல நான்தான் எல்லா வேலையும் பார்க்க வேண்டி இருக்குது. வேலைக்குப் போனா வீட்டு வேலையை பார்க்கக்கூடாதா? பார்த்தா குறைஞ்சு போகுமோ’ – வேலைக்குப் போகும் மருமகளை, ஏதோ சிங்காரித்து சினிமாவுக்கு சென்று வருவதைப்போல நினைத்து இப்படிப் பேசும் மாமியார்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலை நீங்கள் சந்தித்தால், “நான் தினமும் ஆபீஸ் போய்விட்டு, இத்தனை மணிக்குத்தான் திரும்புவேன், நான் வந்தபிறகு இந்தெந்த வேலைகளை கவனித்துக் கொள்கிறேன்” என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள்.

`உங்கப்பா நல்லா இருக்கும்போதே உனக்கு வேணுங்கறதை கேட்டு வாங்கிட்டு வந்துடு, பின்னாடி உங்க அண்ணன்கள்கிட்டே எதிர்பார்த்துகிட்டு நிக்க முடியாது பாரு…”

இந்த வார்த்தைச் சாட்டைக்கு இப்படி பதிலளியுங்கள்..”எனக்கு என்ன செய்யணும்னு எங்க அப்பா அம்மாவுக்குத் தெரியும். நான் போய் கேட்க வேண்டியதில்லை, கேட்கவும் மாட்டேன். எனக்கு தேவைன்னு தெரிஞ்சா அவங்களே தேடி வந்து செய்வாங்க”

“உன் பெண்டாட்டி வரவர என்னை மதிக்கிறதே இல்லை. நான் சொன்னா காதிலேயே வாங்காமப் போறா, ஆபிசிற்கு ரொம்ப குலுக்கி மினுக்கிப் போறா?”

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பத்திலேயே உங்களின் உண்மை நிலையை கணவரிடம் விளக்கி விடுவதுதான் சிறந்த வழி. மாமியாரின் கோபத்துக்கான காரணத்தை தெரிந்து பேசித் தீர்க்க முடியுமா? என்றும் முயற்சி செய்யுங்கள்.

“இவள் காசை கன்னாபின்னான்னு செலவழிச்சு கரியாக்குறா. திடீர்ன்னு ஆயிரம், ரெண்டாயிரத்துக்கு புதுப்புடவை எடுத்துக்கிறா, நகைநட்டு வாங்கி குவிக்கிறா, என் மகன் பாவம் வாயில்லாப்பூச்சி, எதையும் கேட்கறதில்லை.”எல்லோர் வீட்டு மாமியார்களும் கூறும் பொதுவான `கம்ப்ளெயிண்ட்’ இது…

“சிக்கனம் தேவைதான். அதுக் காக டிரஸ்ஸில் சிக்கனம் பிடிக்கலாமா? தேவைக்குத்தான் வாங்கி இருக்கிறேன்” என்று சொல்லுங்கள். அடுத்து விசேஷ நாட்களில் மாமியார், நாத்தனாருக்கும் (கடமைக்காக அல்லாமல் அன்புடன்) ஒரு புடவை எடுத்துக் கொடுங்கள். பிரச்சினை வந்தவழி தெரியாமல் ஓடிப் போய்விடும்.

“பெரிய ஆபீசர் வீட்ல இருந்து வந்தவளே பாத்திரம் கழுவுறா, எல்லா வேலையும் பாக்குறா? இவளுக்கென்ன? மூத்த மருமகள் கேட்ட அடுத்த மாசமே என் மகனுக்காக பைக் வாங்கி தந்துட்டா..! உன்கிட்ட கேட்டாலும் கிடைக்குமா, உங்கப்பா நெலமைதான் ஊருக்கே தெரியுமே?

`இப்படிப் பேசுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை’ என்பதை கணவரிடம் நேரடியாகச் சொல்லி விடுங்கள். அதன்பிறகு ஓரளவாவது இந்த மாதிரி ஒப்பீடு குறையும்.

எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் `எங்கம்மாவை அப்படிப் பேசாதே’ என்று சொல்ல வாரிசு வளரும் வரை நீங்களாகத்தான் சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் புதுப்பெண்களே!

வெற்றிக்கான நான்கு தூண்கள்





ஒரு கட்டிடத்திற்கு அல்லது மண்டபத்திற்கு, குறைந்தது எத்தனை தூண்கள் தேவை?

நான்கு.


வெற்றியெனும் மாளிகைக்கும் குறைந்தது நான்கு தூண்கள் தேவை.
என்னென்ன?


அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால்… ஆங்கில அகராதியைப் புரட்டியிருக்கிறீர்கள் அல்லவா? அதன்படி….


ஆக, நல்லவை எல்லாமே, கஷ்டத்திற்குப் பிறகுதான் வருகின்றன என்பதை ஆங்கில அகராதி சூசகமாய்ச் சொல்கிறது.


அதேபோல, வெற்றி நமக்கு வேண்டுமானால், நான்கு விஷயங்கள், முன்னதாக நமக்குத் தேவை. என்னென்ன?


முதல் தேவை:

பொறுமை


கஷ்டங்கள், பிரச்னைகள், குறை பாடுகள், அசௌகரியங்கள் இவைகளை சகித்துக் கொண்டு தாக்குப்பிடிக்கும் பொறுமை. Patience.



இரண்டாம் தேவை :

 சக்தி



பொறுமையோடு இருக்கிறேன் என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கலாமா? கூடாதுதானே.


பொறுமை காக்கும் அதே நேரத்தில், நமது பலங்களையும் ஆற்றல்களையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டும். என்னென்ன பலங்கள்?


அறிவு பலம், மனோ பலம், ஆள் பலம், பண பலம் எல்லாம் தான்.
ஆம். இரண்டாவது தேவை, சக்தி( Power.)


மூன்றாம் தேவை :

 திட்டம்


வாழ்க்கையில் நமது லட்சியங்களை அடைவதற்கான, சரியான, தெளிவான, முழுமையான, நுட்பமான திட்டம். plan


நான்காம் தேவை :

விடாமுயற்சி


திட்டம் தயாராகிவிட்டால், சந்தேகமேயில்லாமல் அடுத்த தேவை முயற்சி, முயற்சி, முயற்சி, குறிப்பாக, தடங்கலுக்குத் தளராத விடாமுயற்சி, வெற்றியைத் தொடும்வரை, தொடர்ந்து செய்ய வேண்டிய விடாமுயற்சி Preseverance


இந்த நான்கையும் தான், வெற்றி மாளிகையில் நான்கு தூண்கள் (Pillars) என்று குறிப்பிடுகிறேன்.


ஆக 4Ps என்று சொல்லப்படும்,

PATIENCE

POWER

PLAN

PERSEVERANCE


என்ற நான்கு தூண்களும் உறுதியாக இருந்தால், வெற்றியின் விளைவாகிய செழுமை (Prosperity) எனும் மேற்கூரை, தானே வந்து சேர்ந்துவிடும்.

பலவீனங்களை பலமாக்குவோம்...?



 ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்?
பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனைப் பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக்கொண்டார்.


பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்க ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்


"குருவே.. ஜூடோ சாம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா? " என்றான்.


"இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்" என்றார் குரு.


குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !

முதல் போட்டி.


ஜூடோவில் எல்லா வகைகளும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது.

எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.


இரண்டாவது போட்டி.


அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான்.
அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.


கடைசிப் போட்டி.



எதிரே இருப்பவன் பலமுறை சாம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது.
முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான் எதிராளி. பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள்.

"வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்" என்றார் குரு.

இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான். பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான்.


பார்வையாளர்களுக்கு ஆச்சரியம்.


அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான் "குருவே, நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன்? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே" என்றான்.


புன்னகைத்தபடியே குரு சொன்னார் "உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.

இரண்டாவது இந்த தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும்.

உனக்குத் தான் இடது கை கிடையாதே! உன்னுடைய பலவீனம்தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது!"

குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான்.  

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!




1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

கசப்பு அமுதம் பாகற்காய்...!!


 பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அல்லது. மாறாக அமுதத்துக்கு சமமானது. நம்முடைய உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக் கொண்டு எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும். பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும்.


இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக்கும். இதனுடன் சிறிது புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. பாகற் காயை அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் ஜூரம், இருமல், இரைப்பை, மூலம், வயிற்றுப்புழு ஆகியவை அகலும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.


பாகற்காய் எளிதில் ஜPரணமாகாது என்றாலும் ஜடாராக் கினியை ஊக்குவிக்கும். கபம், பித்தம், ரத்த தோஷம், பாண்டு, குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்குவது இதன் இயல்பாகும்.


பாகற்காய் சிறந்த உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. பாகற்காய் இலையின் சாறினை ஒரு அவுன்சு சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். இலையை அரைத்து உடம்பு முழுவதும் தடவி 1 மணி நேரம் ஊறியபின் குளிக்க வேண்டும். இது போன்று 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாய்க் கடியின் விஷம் உடம்பில் ஏறாது.


பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை சிறிது உரைத்து சிரங்கின் மேல் நல்ல தடிப்பாக தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்று சிரங்கு உதிர்ந்து விடும். பாகற் காய் வேரை சந்தனம் போல அரைத்து நல்லெண்ணெய் - யில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும் புறமும் தடவி வந்தால் பெண்களுக்கு கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்குப் பின்வரும் மண்குத்தி நோய்க்கு இது கண்கண்ட மருந்து.


கொடி பாகல் இலையுடன் 500 மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் மாலைக்கண் அகலும். 2 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே சிறிது வெல்லத்தைக் கரைத்து சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்பூச்சிகள் வெளியேறும். பாகல் சாற்றில் சிறிது குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த வயிறு சிறுத்து விடும். பாகல் இலைச் சாற்றை குடிப்பதால் பாம்பு விஷம் நீங்கும். பாகல் இலையை உலர்த்தி பீடி போல சுற்றிக் கொண்டு அதன் புகையை உறிஞ்சினால் பல் நோய்கள் பறந்தோடி விடும்.


பாகல் இலைச் சாற்றை 1 அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில் 1_2 அவுன்ஸ் நல்லெண்ணெய் கலந்து உட் கொண்டால் காலரா உடனே நீங்கும். 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவுக்கு பெருங்காயப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நிரந்தரமாக குணம் ஆகும்.


அதுபோல 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் அதே அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்த முடியும்.

தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்......???




தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்


மேல்நாட்டு நாகரீகம் என்ற ஒரு மோகத்தில் தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்.

1. மண்பானை சமையல்.

மண்பானை சமையல் ஆரோக்கியமானது. நீண்ட ஆயுள் தரக்கூடியது. மண் பானையில் சமைத்து உண்டவர்கள்100 வயது வாழ்ந்தது சாதாரண விஷயம். ஆனால் இன்று 60 வயதை தாண்டுவது பெரிய விஷயம்.

 2. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.

வேப்பங்குச்சியில் பல் துலக்கி கொண்டு இருந்த போது ஆரோக்கியமான பல் இருந்தது. இன்று பிரஷ் மூலம் பல் துலக்க வைத்து ஆரோக்கியம் இல்லாத பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல் மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.


3. இயற்க்கை மருத்துவ முறை


ஆங்கிலேய ஆளுமை காலத்தில் தமிழர்களின் பல நூற்றாண்டு பெருமை பெற்ற மருத்துவ முறைகள் அழிக்கப்பட்டன. அதற்க்கு பதிலாக அவர்கள் கொண்டு வந்த அலோபதி மருத்துவ முறை அதிகமான பக்க விளைவுகள் கொண்டது.


4. இயற்கை வாசனை திரவியங்கள்


இயற்கையான வாசனை திரவியங்களை தயார் செய்து உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சென்று வணிகம் செய்தார்கள் தமிழர்கள். ஆனால் இன்று ரசாயன வாசனை திரவியங்களை வாங்கி உபயோகிக்கிறார்கள்.

5.கட்டிட கலை

கட்டிட கலையில் நுண்ணறிவு கொண்ட கை தேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று யாருமே இல்லை என்பது தான் உண்மை.

6. பாசி பயத்து மாவு, கடலை மாவு, சீயக்காய், மஞ்சள்

பாசி பயத்து மாவு, கடலை மாவு, சீயக்காய் தேய்த்து குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டும் அல்ல எந்த பக்க விளைவுகளும் இல்லாதது. மேலும் இவை  நீரில் கலக்கும் போது எந்த தீங்கும் இல்லாதது. மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களுக்கு 99% தோல் சம்பந்தமான வியாதிகள் வராது.
ஆனால் இன்று சோப்பு, ஷாம்பு மற்றும் பல ரசாயனம் கலந்த பொருட்கள் தான் அதிகம் வாங்கப்படுகிறது.

மேலும் இவற்றை உபயோகித்து குளித்தபின் இவை நீரில் கலந்து நீரை மாசுபடுத்துகின்றன. சற்றே யோசித்து பாருங்கள், ஒரு நாளைக்கு, உலகம் முழுவதும் எத்தனை பேர் சோப்பு, ஷாம்பூ உபயோகிக்கிறார்கள் என்று.

அவர்கள் தினமும் குளிக்கும் போது எத்தனை கோடி லிட்டர் தண்ணீரில் இந்த சோப்பும், ஷாம்பூவும் குளித்தபின் கலக்கும் என்று.


7. செருப்பு.

ரப்பர் செருப்பும், தோல் செருப்புமே ஆரோக்கியமானவை இந்த ஷூ அணிவது உடலுக்கு கேடு விளைவிக்கும். காலை முதல் இரவு வரை ஷூ அணிந்துவிட்டு இரவில் அதை கழற்றும்போது உங்கள் பாதத்தை புறங்கையால் தொட்டு பார்த்தீர்களானால் மிகவும் வெப்பமாக இருக்கும். இந்த வெப்பம் உடலுக்கு தீங்கானது. ரப்பர் செருப்பும், தோல் செருப்பும் அணியும் போது இந்த வெப்பம் இருக்காது.

 8. கோவணம்

இந்த தலைப்பை பார்த்தல் பல தமிழர்களுக்கு மிகவும் கேவலமான ஒரு விஷயம் என்று தோன்றும். கோவணம் அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் நல்ல நிலையில் இருக்கும். ஆனால் ஜட்டி அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் மிகவும் குறைவாக இருக்கும் காலை முதல் இரவு வரை ஜட்டி அணிந்திருக்கும் ஒரு ஆண், இரவில் ஜட்டியை கழட்டும்போது அவன் இரு தொடைகளும் சேரும் இடத்தில் அவன் புறங்கையால் தொட்டு பார்த்தால் மிகவும் வெப்பமாக இருக்கும். இந்த வெப்பம் அவனது விந்தணுக்களின் வீரியத்தை குறைக்கும். ஆனால் கோவணத்தை 24 மணி நேரமும் அணிந்திருந்தாலும் இது போன்ற வெப்பம் இருக்காது. கோவணம் அணிந்த ஒரு கிராமத்து கிழவரின் விந்தணுக்களின் வீரியத்தை விட ஜட்டி அணிந்த ஒரு நகரத்து இளைஞனின் விந்தணுக்களின் வீரியம் குறைவாக இருக்கும்.

9.கடுக்கண்

இரண்டு காதுகளிலும் வெள்ளி அல்லது தங்கத்தினால், கடுக்கண் அணிவது மூளையின் செயல்பாட்டை நன்கு செயல்பட வைக்கும்.


10. வீரம்

வீரத்தின் விளைநிலமாக இருந்தது தமிழர்கள் தான். ஆனால் இன்று வீரம் என்பது, குடி தண்ணீர் குழாயில் சண்டை போடுவது, தண்ணீர் கேட்டு பக்கத்து மாநிலத்திடம் சண்டை போடுவது, என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும் கேவலமான விஷயம். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த அந்த வீரம் மீண்டும் தமிழர்களுக்கு வருமா என்பது ???????????

எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?




எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?


தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.


மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்,


வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்,


 ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள்.


கெட்ட கனவு வருகிறதா:


சிலருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும் அவர்களின் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போல் இருந்தால் அந்த பிரச்சினை வரவே வராது. அதற்கு ஒரு சுலோகமும் உள்ளது.


ராமம் கிருஷ்ணம் ஹனுமந்தம்

வைணதேயம் விருகோதரம் சயனே,

யஸ் ஸ்மரேன் நித்யம்

துஸ்வட்னம் தஸ்ய நஸ்யதி.



தூங்கும் முன் இந்த சுலோகத்தை சில முறை மனதார கூறி பிரார்த்தனை செய்யுங்கள். ஆழ்ந்த தூக்கம் வரும். கெட்ட கனவுகள் வரவே வராது

பெயர் வைப்பதில் கில்லாடி தமிழர்கள்...!




பாலங்கள், சாலைகள், கட்டடங்கள் என அனைத்திற்கும் பெயர் வைப்பதில் கில்லாடிகள் தமிழர்கள். பெயர் வைக்கும் போது எதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை பற்றி கவலை கொள்வதும் கிடையாது.

குறிப்பாக திராவிட ஆட்சிக்காலத்தில் இந்த பெயர் வைக்கும் வைபவம் அரசின் சாதனை பட்டியலாகவே பார்க்கப்படுகிறது.ஆனால் இந்த பெயர் வைக்கும் படலம் விவசாயத்துறையையும் விட்டு வைக்க வில்லை.

நெல் பயிரையும் அலையாய் அலைக்கழித்து இருக்கின்றனர். நமது அரசியல்வாதிகளின் நகைச்சுவை. நெல் சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்பம் திருந்திய நெல் சாகுபடி. குறைவான தண்ணீரில் கூடுதல் மகசூல் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த தொழில் நுட்பம் ஆங்கிலத்தில் System of Rice Intensification என்றழைக்கப்படுகிறது.

1970களிலேயே இதற்கான ஆய்வுகள் நடைபெற்ற போதும், அமெரிக்காவின் நியூார்க்கின் இதாகாவில் உள்ள கார்னெல் பல்கலைகழகம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. உணவு, வேளாண்மை, மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவர் நார்மன் உபாஃப் இதனை உலகெங்கும் எடுத்துச் சென்றார்.

2005களில் தான் ஆசியாவில் திருந்திய நெல் சாகுபடி வளர்ந்தது. தமிழகத்திலும் சில ஆண்டுகளாகவே பிரபலமடைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, திருந்திய நெல் சாகுபடி குறித்து விரிவாக காணொளி தொகுப்பு ஒன்றை தமிழக வேளாண்மை துறை தயாரித்துள்ளது.

 அரை மணிநேரத்திற்கும் மேலாக ஒளிபரப்பப் தக்க வகையிலான இந்த காணொளி தொகுப்பை அப்போதைய முதலமைச்சரிடம் காண்பிப்பதற்காக சில நிமிடங்கள் கொண்ட தொகுப்பாக குறைத்து முதலமைச்சரிடம் காண்பித்துள்ளது. திருந்திய நெல் சாகுபடி தொடர்பான அந்த காணொளியை பார்த்த முதலமைச்சர் தான் பிறந்த தஞ்சை தரணிக்கு இது உபயோகமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

ரொம்பவும் மகிழ்ந்து போன அவரிடம் முழு படத்தையும் காண்பித்து இருக்கிறார்கள். முடிவில், “இந்த முறையில் நெல் சாகுபடி செய்தால் மகசூல் அதிகரிக்கும். இதனால் செழுமை ஏற்படும். அதனால் செழுமை நெல் சாகுபடி என்று பெயர் வைங்கய்யா,” என்று சொல்லி இருக்கிறார். System of Rice Intensification என்பதற்கு திருந்திய நெல் சாகுபடி என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

அப்படி தான் வேளாண் பல்கலைக்கழகம் பெயர் வைத்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சரோ அதனால என்னய்யா? கடைசியில விவசாயிகளுக்கு செழிப்பு தானே வரும் செழுமை நெல் சாகுபடினு பெயர் வைய்ங்கய்யா. தமிழ்ல அது தான் சரியா வரும் என்று சொல்லியிருக்கிறார். சரி என்ன செய்வது சொல்லியது முதலமைச்சர் ஆயிற்றே! புதிய பெயர் சூட்டப்பட்டு விட்டது.

பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தமிழக வேளாண் துறையும் செழுமை நெல் சாகுபடி என்று புதிய நாமகரணம் சூட்டியது. வேளாண் பல்கலை முதல் உலக நெல் ஆராய்ச்சி நிலையம் வரை நெல் சாகுபடி தொழில்நுட்பத்திற்கு தமிழகத்தில் பயன்படுத்தும் பெயர் செழுமை நெல் சாகுபடி என்று தெரிவிக்கப்பட்டது.

 சில மாதங்கள் உருண்டோடின. தமிழகத்தில் செழுமை நெல் சாகுபடி தொழல் நுட்பத்தில் எவ்வளவு நிலம் பயிரிடப்படுகிறது. என்பது போன்ற விவரங்கள் முதலமைச்சரிடம் தரப்பட்டன. அதனை பார்த்துக் கொண்டிருந்த முதலமைச்சர் திடீர் யோசனையில் ஆழ்ந்தார். அப்போது ராஜ ராஜ சோழனின் சதய விழா நடைபெற்ற காலம். ஏன்ய்யா பேசாம செழுமை நெல் சாகுபடிங்கிறதுக்கு பதிலா ராஜாராஜன் 1000ம் னு என் பெயர் வைக்க கூடாது என்று கேட்டிருக்கிறார்.

நெல் என்றால் தஞ்சை, தஞ்சை என்றால் ராஜ ராஜ சோழன், அதனால் ராஜ ராஜன் பெயர் வைத்து விடலாம் என்று கூறியிருக்கிறார். அதிகாரிகளோ அதிர்ந்து போய் விட்டார்கள். ஐயா இது வெறும் தொழில்நுட்பம் தான். இதனை தமிழில் எப்படி அழைக்க வேண்டும் என்பது தான் பிரச்னை. இது புது ரக நெல் கிடையாது. கோ 40, அம்பை 16 என்று நெல் ரகங்களுக்கு பெயர் வைப்பது போன்று இதற்கு பெயர் வைக்க முடியாது என்று தெரிவித்து இருக்கின்றனர்.

அதனால என்னய்ய தமிழகத்தில நாம தானய்யா முடிவு செய்யணும். பேசமா ராஜ ராஜன் 1000ம்னு பெயர் வையுங்க என்று முடிவாக கூறி விட்டார் முதலமைச்சர். வேறு என்ன செய்வது சொல்லியது முதலமைச்சராயிற்றே. ராஜ ராஜன் 1000ம் என்று பெயர் சூட்டப்பட்டது. திருந்திய நெல் சாகுபடி, செழுமை நெல் சாகுபடியாகி, ராஜ ராஜன் 1000 ஆக பெயர் மாறியது. பிறகு ஆட்சி மாறியது. கட்டடங்கள் முதல் திட்டங்கள் வரை அனைத்திற்கும் பெயர் மாற்றம் நடந்தது.

அதுபோலவே ராஜ ராஜன் 1000ம் என்ற பெயரும் மாற்றப்பட்டது. புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தது போல மீண்டும் திருந்திய நெல் சாகுபடி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வேளாண் துறை அதிகாரிகளும், வேளாண் பல்கலைகழகமும், விவசாயிகளும் என்ன செய்வது? மீண்டும் திருந்திய நெல் சாகுபடியானது System of Rice Intensification.

உலகெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம்



2014 -ஆம் வருடத்தை வரவேற்கும் பொருட்டு உலகெங்கும் கொண்டாட்டங்கள் களை கட்டி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன் போன்ற முக்கிய நகரங்களில் வண்ணமயமான வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

நியூசிலாந்தில் புது வருடத்தை வரவேற்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கை நிகழ்வுகள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.

ஆக்லாந்தின் ஸ்கை டவரில் நிகழ்த்தப்பட்ட இந்த வண்ணமயமான நிகழ்வை நகரின் பல பகுதிகளில் இருந்தும் கண்டு களித்த மக்கள் உற்சாகக் குரலெழுப்பி புத்தாண்டை வரவேற்றனர்.

கடவுள் இருக்கிறாரா? - குட்டிக்கதைகள்!




கடவுள் இருக்கிறாரா?


``கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை?'' சீடன் கேட்டான்.


 குரு ஒரு கதை சொன்னார்:


``கடவுள் இருக்கிறார் என்று நம்பிய ஒரு மனிதன் மெல்ல சொன்னான், `கடவுளே! என்னோடு பேசுங்களேன்!'


அப்போது குயில் ஒன்று பாடியது.


அதைக் காதில் வாங்காத அவன், உரத்த குரலில் கத்தினான்: `கடவுளே, என்னோடு பேசுங்களேன்!' உடனே உரத்த இடியோசை, எழுந்தது.


அதையும் பொருட்படுத்தாத அவன், `பேசாவிட்டாலும், உன் தரிசனமாவது தரக்கூடாதா?' என்று இறைவனிடம் கேட்டான்.


சுடர்விட்டுப் பிரகாசித்தபடி, வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது. அதைக் கவனிக்காமல் அவன் கேட்டான்:


`ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்த்த மாட்டாயா?'


கடவுள் மெல்ல கீழே இறங்கி, பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார்.


 அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளால் தட்டிவிட்டு, நடந்தபடி சொன்னான். `கடவுள் இல்லை! இருந்திருந்தால் என்னோடு பேசி இருக்கலாம்.


பார்க்க முடிந்திருக்கும். அற்புதமாவது நிகழ்ந்திருக்கும் எதுவுமே நடக்க-வில்லையே!'' கதையைக் கேட்ட சீடன் சொன்னான்.


 ``புரிந்தது குருவே! கடவுள், தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். நாம் தான் புரிந்து கொள்வதில்லை!''

தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு...?




>> முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.


>> முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.


>> மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.


>> மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங் காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.


>>மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடிவளரும்.


>> பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது?




1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

# எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது.இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

தூக்கமும் நீங்களும்...




உலகில் சரிபாதிப் பேர், நிம்மதியான உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இருட்டு- வெளிச்சம், இன்பம்- துன்பம், கஷ்டம்- நஷ்டம், நன்மை- தீமை, சந்தர்ப்பம்- சூழ்நிலை இவற்றோடு சம்பந்தப்பட்டது, தூக்கம். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தூக்கத்தை வரவழைக்க முடியாது.


அதேமாதிரி நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் வருகிற தூக்கத்தை நிறுத்தவும் முடியாது. தூக்கமின்மை, அதாவது போதிய நேரம் தூங்காததை மருத்துவ மொழியில் ‘இன்சோம்னியா’ என்று சொல்கிறார்கள். தூங்கப்போவதற்கு முன்பு தீவிரமான யோசனை, மூளையைக் கசக்கி சிந்திப்பது என்று சொல்வார்களே,


அந்த மாதிரி எண்ணங்கள் உருவாவது, உடலை அதிகமாக வருத்திக்கொள்வது, உடலுக்கு அதிகமாக வேலை கொடுப்பது, தூங்கும் இடம் ஒரு நல்ல சூழ்நிலையில் அமைந்திராமல் இருப்பது, தூங்கும் நேரம் ஒத்துப் போகாமல் இருப்பது, நாள்பட்ட உடல் நோய்கள், தாங்க முடியாத வலி, மன அழுத்தம்,


மன உளைச்சல் இவை அனைத்துமே தூக்கத்தைப் பாதிக்கும். தூக்கத்தை வரவழைக்க பலரும் பலவித முறைகளைக் கையாளுகிறார்கள். சிலர் யோகா செய்கிறார்கள். சிலர் தியானம் பண்ணுகிறார்கள். சிலர் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள்.


சிலர் மது அருந்துகிறார்கள். இப்படி பலவிதமான முறைகளைக் கையாண்டு தூக்கத்தை வரவழைக்கிறார்கள். தூக்கமின்மைக்கும் மதுவுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள்.


தூக்கம் வர வேண்டும் என்பதற்காகவே மதுபானம் அருந்த ஆரம்பித்தவர்கள் நிறைய பேர். ஆரம்பத்தில் மதுபானம் நல்ல தூக்கத்தைத் தருவதைப் போலத் தோன்றினாலும், நாளடைவில் அது தூக்கத்தைக் குலைக்கும். முன்னிரவில் தூக்கத்தை கொடுத்து பின்னிரவில் தூக்கத்தைக் கெடுத்துவிடும் தன்மையுடையது மது பானம்.


மேலும் கண்கள் சுற்றிக்கொண்டே தூங்கும் தூக்கத்தையும் (ஆர்.இ.எம். தூக்கம்) மது குறைத்து விடும். வயதானவர்களுக்கு ஒரு சிறிய சத்தம் கூட தூக்கத்தை கெடுத்துவிடும். அதற்குப் பிறகு தூக்கத்தை வரவழைக்க அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.


மறுபடியும் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகும். மனிதனுடைய பழக்கவழக்கங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் தூக்கத்தைப் பற்றிய பலவிதமான விஷயங்கள் நமக்குத் தெரியவருகின்றன. செயற்கை வெளிச்சங்கள் அதிகமில்லாத பழைய காலத்தில், சூரியன் மறைந்த கொஞ்ச நேரத்திலேயே தூங்கப் போய்விடுவார்கள்.


ஆனால் இரவில் நிறைய தடவை விழிப்பார்கள். மறுபடியும் தூங்குவார்கள். முன்னிரவில் ஆழ்ந்த தூக்கமும், பின்னிரவில் லேசான தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். பின் னிரவில் கண்கள் சுற்றும் (ரேபிட் ஐ மூவ்மெண்ட்) தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். தூங்குகிற நேரத்தில் உடம்பும், மூளையும் வேலை பார்ப்பதில்லை, இரண்டும் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம்.


இது சரியல்ல. நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், விளையாடிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும் நமது மூளை ‘பிசி’யாக வேலை பார்த்துக் கொண்டு தான் இருக்கும். நமக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும் நேரத்தில், மூளையும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்.


ஆனால் ஓரளவுதான் மூளை ஓய்வு எடுத்துக் கொள்கிறது. நாம் தூங்கும்போது மூளை அதுபாட்டுக்குச் செயல்பாட்டில் இருக்கிறது. அன்றைய பொழுதுக்கும், அடுத்தடுத்த நாட்களுக்கும் உங்களை தெம்பாக வைக்க, உங்களை தேக ஆரோக்கியத்தோடு உற்சாகமாக வைக்க, உடலுக்குள் என்னென்ன ரசாயன மாற்றங்கள் பண்ண வேண்டுமோ அதையெல்லாம் பண்ணி, உடம்பை மூளை தயாராக வைத்திருக்கிறது.

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது....?




பழனி – பஞ்சாமிர்தம்

திருநெல்வேலி – அல்வா

காரைக்குடி – செட்டிநாடு வீடு

கீழக்கரை -லோதல் , வட்டிலப்பம்

பண்ருட்டி – பலாப்பழம்

மணப்பாறை – முறுக்கு

சேலம் – மாம்பழம்

திண்டுக்கல் – பூட்டு

திருப்பூர் – பனியன்

மதுரை – குண்டு மல்லி

சென்னை – மெரினா

சிவகாசி – பட்டாசு

நாமக்கல் – முட்டை

தஞ்சாவூர் – தட்டு

பேரையூர் – பருப்பு சாதம்

நமணசமுத்திரம்- வெள்ளரிக்காய்

பிள்ளையார்பட்டி- அப்பம், மோதகம்

மன்னார்குடி – மதில்

திருவாரூர் – தேர்

கும்பகோணம் – கோவில், வெற்றிலை

திருச்சி – மலைக்கோட்டை

மேட்டூர் – அணைகட்டு

வேலாகண்ணி – மாத கோவில்

சேலம் – இரும்பு

கோவை – பஞ்சு

திருவிடைமருதூர்- தெரு

காஞ்சிபுரம் – பட்டு

குற்றாலம் – அருவி

கொல்லிமலை – தேன்

கோட்டக்கல் – ஆயுர்வேதம்

சிதம்பரம் – ரகசியம்

நீலகிரி – தேயிலை

ராஜபாளையம் – நாய்.

முதுமலை – யானை

கோவில் பட்டி – முறுக்கு

பத்தமடை – பாய்

ஸ்ரீவில்லிபுத்தூர் – பால்கோவா

அலங்காநல்லூர் – ஜல்லிக்கட்டு

திருவண்ணாமலை – தீபம்

வளையப்பட்டி – தவில்

திருச்செந்தூர் – வேல்

கன்னியாகுமரி – வள்ளுவர் சிலை

ஒக்கேனேக்கல் – நீர்வீழ்ச்சி

இராமேஸ்வரம் – பாம்பன் பாலம்

கரூர் – கோரைப்பாய்

ஊத்துக்குளி – வெண்ணெய்.

சென்னிமலை – பெட்சீட்.

குமாரபாளையம் – லுங்கி.

சிவகாசி – லித்தோ பிரஸ்(அச்சகம்), வெடி

ஈரோடு – மஞ்சள்.

காங்கேயம் – காளை மாடு

செஞ்சி – கோட்டை

பாளையங்கோட்டை – சிறைச்சாலை

உடையார்பாளையம் — ஜமீன்,கோயில்

வந்தவாசி -கூரைபாய்

கல்பாக்கம் - அனல் மின் நிலையம்

சிவகாசி - காலண்டர்

வெற்றிப் படிக்கட்டுகள் - இவ்வளவுதான்..?





வெற்றிப் படிக்கட்டுகள்:-



சிறு வயதிலிருந்தே நாம் பழக்கப்பட்ட ஒரு விஷயம் நேர அட்டவணை போடுவது. இந்த நேரத்துல, இந்தப் பாடத்தைப் படிக்கணும் என ஒரு டைம் டேபிள் போட்டு வைத்திருப்போம். இந்த விஷயத்தை நம்மளோட நிறுத்தினமா..? ம்ஹூம்.. நம் தங்கை, தம்பி… குழந்தைகள்.. பேரக்குழந்தைகள் அப்படினு அடுத்தடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கிறோம். இந்த நேரத்துல இதைத்தான் படிக்கணும், எழதணும்னு நாம பழகற சின்ன வயது பழக்கம், வளர்ந்து பெரியவங்களானதும், இந்த சமயத்துல இந்த வேலையைத்தான் செய்யணும், செய்தாகணும்னு நம்ம மனசுல பதிவாகி நம்மளை நாமளே கட்டாயப்படுத்திக்கிறோம். இல்ல, அடுத்தவங்களை வற்புறுத்தறோம். அதிக பட்சமா, அளவுக்கதிகமா சோம்பேறித்தனத்தோட இருக்கறப்போ அல்லது பல புதிய விஷயங்களை பழக்கப்படுத்திக்கவோ இந்த கால அட்டவணை விஷயம்.


 யுக்தி உதவலாம். ஆனா, எல்லா சமயங்களிலேயும் இந்த ‘உறுதி’ உதவாது. வளைந்து கொடுக்கும். எந்த நேரத்தில் எது முக்கியம் என யோசித்து செயல்படும் தன்மை, தொழில்சார்ந்த நடவடிக்கைகளில் மிகவும் முக்கியம். நேரநிர்வாகத்தின் ஒரு அம்சமான இந்தப் பண்பைப் பற்றி நாம் முழுதாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஏனெனில், நாம் இப்பொழுது விவாதித்துக் கொண்டிருக்கின்ற அத்தனை விஷயங்களும், ஏதோ பொழுது போவதற்கோ அல்லது வார்த்தை ஜால தோரணங்களைப் படித்து ‘அட’ என்று நீங்கள் வியப்பதற்காகவோ அல்ல, உங்களது தினசரி ‘தொழில் வாழ்க்கையில் நீங்கள் பின்பற்றியாக வேண்டிய வெற்றிக்கான கட்டளைகள், நிதர்சமன ஆலோசனைகள் (Practcal tips).


இப்ப கொஞ்சம் ப்ராக்டிக்கலா யோசிச்சுப் பார்க்க பார்க்கலாமா? நீங்க உங்களோட ‘அட்டவணைப்படி’ வேலை செஞ்சுட்டிருக்கீங்க. உங்க ‘நேர அட்டவணை’யிலேயே இல்லாத, ஆனால் உடனே சரிசெஞ்சே ஆகணும்ங்கற விதத்துல ஒரு பிரச்சனை அல்லது இக்கட்டான சூழ்நிலை ஏற்படுது.


 இப்ப என்ன செய்வீங்க…? என்னோட ‘தினசரி கால அட்டவணையை ‘ எக்காரணம் கொண்டும் பிடிவாதமாக இருப்பீங்களா…? இல்ல, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் நாம என்ன செஞ்சா, நஷ்டம் ஏற்படாம தவிர்க்கலாம்.. அப்படினு யோசிச்சு, அதுக்கான முயற்சிகள் எடுப்பீங்களா…? நிச்சயமா இரண்டாவது முடிவைத்தான் பின்பற்றுவீங்க, இல்லையா? ஏன் இவ்வளவு உறுதியா நான் சொல்றேன். அப்படினா, எந்த வெற்றிகரமான தொழில் முனைவோரும் நீங்க வெற்றிகரமான நபர்தான்னு நான் நம்பறேன். சரியா…?


அதனால், இதுதான்.. இப்படித்தான்.. இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும்…. செய்ய வேண்டிய வேலை என்ன, எதைச் செய்தால் நல்லது, எடுக்க வேண்டிய சரியான முடிவு என்ன என்பதையெல்லாம் உணர்ந்து, நேரம் உங்களை கையாளாமல், உங்களை கட்டுப்படுத்த நேரத்தை அனுமதிக்காமல், நீங்கள் நேரத்தை எப்போது கையாளத் தொடங்குகிறீர்களோ, உங்கள் கட்டுப் பாட்டுக்குள்ள் வைக்கிறீர்களோ, அது தான் சரியான நேர நிர்வாகம் ஒவ்வொரு வெற்றிகரமான தொழிலதிபரும் பின்பற்றும் விதிமுறை இதுதான்.


நேர நிர்வாகம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அது தொடர்பான இன்னொரு முக்கியமான அம்சத்தை, கருத்தைப் (Concept) பற்றியும் பேசியே ஆக வேண்டும். நம் நாட்டில் பெரும்பாலானோர், குறிப்பாக தொழில் முனைவோர் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயம் இது. நிறைய கவலைப்படற, யோசிக்கற, தவறிப் போய்விடக்கூடாதேனு பதைபதைக்கிற.. அந்த விஷயம் …. சரி, உங்க இதயத் துடிப்பை அதிகரிக்க விரும்பல, சொல்லிடறேன். ‘நல்ல நேரம், கெட்ட நேரம்…’ பார்க்கறதுதாங்க. ஒரு புது தொழில் துவங்கும்போது, அது தொடர்பான பூஜை அல்லது கடைதிறப்பு விழா….


இந்த மாதிரியான சமயங்கள்ல நல்ல நேரம், நல்ல நாள் பார்க்கறது இயல்புதான். ஆனால், சிலபேர் தங்களோட தொழிலில் சின்ன சின்ன விஷயங்களுக்காகத் தொழிலில் சின்ன சின்ன விஷயங்களுக்காகக் கூட, எடுத்துக்காட்டாக, தொழில் ரீதியான சந்திப்புகள், கூட்டம், இந்த மாதிரி எல்லாத்துக்குமே நேரம் பார்த்து செயல்படனும்னு ஒரு முடிவோட இருப்பாங்க. ராகு காலத்திலயோ அல்லது செவ்வாய் கிழமை மற்றும் சந்திராஷ்டம் நாட்கள்லயோ யாராவது முக்கியமான நபர் தொழில் விஷயமா வரச்சொன்னாக்கூட, ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்துடுவாரு எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் ஒரு நாள் ரொம்ப சோகமான மனநிலை, முகபாவத்தோட என்கிட்ட ஆலோசனை கேட்டு வந்திருந்தார்.


ரொம்ப ரொம்ப கவலையா, தனக்கு கிடைத்திருக்க வேண்டிய இரண்டு லட்ச ரூபாய் கான்ட்ராக்ட்டை தான் இழந்துட்டதா சொன்னார். அவர் சொன்ன காரணம் என்னை ரொம்பவே யோசிக்க வெச்சது. “நான் சந்திக்க வேண்டிய கெம்பெனியோட முதலாளி கல்கத்தாவில இருக்கிறவர். மாசத்துல ஒருநாள், இரண்டு நாள் மட்டும்தான் சென்னை ஆபீசை பார்வையிட வருவார். நேத்து மத்தியானம் என்னை சந்திக்க வருவார். நேத்து மதியானம் என்னை சந்திக்க வருவார். நேத்து மதியானம் என்னை சந்திக்க நேரம் கொடுத்திருந்தார். ஆனா, அது சரியான எமகண்டம். ரொம்ப முக்கியமான தொழில் விஷயங்கறதால, எமகண்டம் முடிஞ்சு போலாமேனு நான் ஒரு மணி நேரம் லேட்டா போனேன்.


அதுக்குள்ள, அவர் ஊருக்குக் கிளம்பி போய்ட்டதா அவரோட ஆபீஸ் வேலையாட்கள் சொல்லிட்டாங்க. உண்மையிலேயே அவர் ஊருக்குப் போய்ட்டாரா, இல்ல ரொம்ப முக்கியமான அவரோட நேரத்தை நான் வேஸ்ட் பண்ணிட்டேன்ங்கற கோபத்துல என்னை சந்திக்கிறதை தவிர்த்துட்டாராங்கறது தெரியல. அதுவே எனக்கு பெரிய குழப்பமா இருக்கு. ஆனா, அன்னைக்கு எனக்கு சாதகமா முடிஞ்சிருக்க வேண்டிய அந்த தொழில் ஒப்பந்தம் நடக்காமலேயே போயிடுச்சு.. அதுக்கப்புறம் எத்தனை முறை முயற்சி செய்தும் அவரோட பேசவே முடியல….” அப்படினு பெருமூச்சோட, தனது சோகத்திற்கான, கவலைக்கான காரணத்தை சொல்லி முடித்தார்.


ஒரு செயலோட சந்திப்போட முக்கியத்துவம் என்ன, நாம சந்திக்க நேரம் வாங்கியிருக்கற நபரோட அந்தஸ்து என்ன..? அவர் வேலையோட தன்மை… வேலை பளு… இந்த அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்து, சீர் தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில்தான் நீங்க அவரை சந்திக்கிற நேரத்தை, அதன் முக்கியத்துவத்தை உணரனும். ரொம்ப, ரொம்ப உண்மையான, அதி முக்கியமான, தவிர்க்க முடியாத காரணமா இருந்தாலொழிய, வேறெந்த சின்ன, சின்ன காரணத்துக்காகவும் நீங்க வாங்கின முன் அனுமதியை ரத்து செய்யக் கூடாது.


மத்தவங்களோட நேரத்தை வீணடிக்கிற இந்த மாதிரியான செயல்களுக்கு, ‘கெட்ட நேரத்த’ காரணமா காட்டாதீங்க. அப்படி நீங்க முயற்சி போட்டுக்கற அடிக்கல். உங்களைப் பத்தி ரொம்ப ரொம்ப தவறான, கேலிக்குரிய அபிப்ராயம் அடுத்தவங்க மனசில ரொம்ப சுலபமா ஏற்பட்டுவிடும். இது நிச்சயமா உங்களோட தொழில் முன்னேற்றத்துக்கு வேகத்தடையா அமையும்.


சமீபத்துல நான் படிச்ச ஒரு விஷயம். நல்ல நேரம், கெட்ட நேரம் குறித்த ஒரு ஆய்வு என்னை ரொம்பவே யோசிக்க வெச்சது. சொல்லப் போனா, ரொம்ப அதிர்ச்சியாகூட இருந்தது. பெரும்பாலான நேரங்கள்ல, எந்த ஒரு சின்ன வேலையை, ஆக்கபூர்வமான வேலையைத் தொடங்கறதுக்கும் நாம நல்ல நேரம், காலம் பார்க்கிறோம். கெட்ட நேரத்துமேல பழியைப் போட்டுட்டு ஒரு செயலைத் தொடங்க லேட் பண்றோம்… பல சமயங்கள்ல, அப்படியே அது துவங்கப்படாமலேயே போய்டுது. நீங்களும் அந்த ரக மனிதரா…? அப்ப நான் சொல்லப் போற அந்த ஆய்வை நீங்க அவசியம் படிக்கனும். ஆனால் அதுக்கு நீங்க இன்னும் ஒரு மாதம் காத்திருக்கணுமே…!

புத்தாண்டு உறுதிமொழி: 'பாஸ்வேர்டை மாற்றுவோம்!'



புத்தாண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டு மாற்றத்துக்கான காலம் எனும் நம்பிக்கையில், இந்த ஆண்டு முதல் இதை செய்யலாம் என தனிப்பட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதற்கான நேரம் இது.


புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டு பரபரப்பு அடங்கிய கையோடு மறந்து விடுவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. என்றாலும், வழக்கமான உறுதிமொழிகளோடு இந்த ஆண்டு புதிதாக ஒரு சூளுறை மேற்கொள்ளலாம். அது 'பாஸ்வேர்டை மாற்றுவோம்' என்பதுதான்.


இதைக் காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம். காரணம் விடைபெற இருக்கும் 2013-ம் ஆண்டு தொழில்நுட்ப உலகை பொறுத்தவரை பாஸ்வேர்டு விழுப்புணர்வு ஆண்டாக அறியப்படலாம். அந்த அளவுக்கு 2013-ல் பாஸ்வேர்டு திருட்டுகள் நடைபெற்று இருக்கின்றன.


அடோப் உள்ளிட்ட பல இணைய நிறுவங்களின் லட்சக்கணக்கான பயனாளிகளின் பாஸ்வேர்டை தாக்காளர்களால் திருடப்பட்டது பற்றி இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் கூட பேஸ்புக், கூகுள் உடபட பல நிறுவனங்களின் லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகள் தாக்காளர்களின் கைகளின் சிக்கியது பற்றி செய்தி வெளியாகியுள்ளது.


இப்படி கொத்துக் கொத்தாக பாஸ்வேர்டுகள் களவுபோவது பற்றி நிபுணர்கள் கவலையோடு விவாதித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மேற்கொள்ள முன் வைக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானது பயனாளிகள் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற வேண்டும் என்பதுதான். அடிக்கடி மாற்றாவிட்டாலும் பரவாயில்லை, மிகப்பெரிய அளவில் பாஸ்வேர்டு திருட்டு நடைபெற்ற செய்தி வெளியானால், முதலில் பாஸ்வேர்டை மாற்றியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தாக்குதலுக்கு இலக்கான சேவையின் பயனாளி என்றால் இதை நிச்சயம் செய்தாக வேண்டும்.


பொதுவாகவே ஒரே பாஸ்வேர்டை வைத்திராமல், அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருப்பது இணைய விஷமிகள் அவற்றை எளிதில் யூகித்து கைவரிசை காட்டாமல் இருக்க உதவும் என்கின்றனர். இதை இதுவரை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போது பாஸ்வேர்டு களவு போகும் வேகத்தை பார்த்தால் அலட்சியம் ஆபத்தில் முடியும் என்றே சொல்லத் தோன்றுகிறது.


எனவே, புத்தாண்டு உறுதி மொழியாக பாஸ்வேர்டு மாற்றத்தை மேற்கொள்ளுங்கள். பாஸ்வேர்டு மாற்றும்போது பாதுகாப்பான பாஸ்வேர்டுக்காக அடிக்கடி வலியுறுத்தப்படும் குறிப்புகளை கவனமாக பின்பற்றுங்கள். அதாவது வழக்கமான பாஸ்வேர்டு மற்றும் எல்லோரும் பின்பற்றும் பாஸ்வேர்டு உத்திகளை தவிர்த்து விடுங்கள். அதோடு ஒரே பாஸ்வேர்டை ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளில் பயன்படுத்துவதையும் கைவிடுங்கள்.


பலரும் சுலபமாக இருக்கிறது என்று ஒரு சேவையில் பயன்படுத்தும் பாஸ்வேர்டையே மேலும் பல சேவைகளில் பயன்படுத்துகின்றனர். பல சேவைகள் இமெயில் அல்லது சமூக வலைதள பாஸ்வேர்டையே பயன்படுத்த ஊக்குவிக்கின்றன. இது எளிதாக இருக்கலாம். ஆனால் ஆபத்தானது. குறிப்பிட்ட ஒரு சேவையில் பாஸ்வேர்டு திருடப்பட்டால் அதன் மூலம் தாக்காளர்கள் உங்களின் மற்ற சேவைகள் அனைத்துக்குள்ளும் நுழைந்து விடும் அபாயம் இருக்கிறது.


எனவே பல பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் நிலை இருந்தால் , ஒவ்வொன்றுக்கும் ஒரு பாஸ்வேர்டை உருவாக்கி கொள்வதே நல்லது.


பாஸ்வேர்டை மாற்றுங்கள். இணையப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள்.

மிகச் சிறந்த தாய்...!



தனது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் மிகச்சிறந்த தாயாக தனது மகள் ஆராத்யாவை வளர்த்து வருவதாக நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் - ஜெயாபச்சன் தம்பதியினரின் மகனும், நடிகருமனான அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது 2 வயதில் ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி மிகச் சிறந்த தாயாக தனது கடமைகளை நிறைவேற்றி வருவதாக மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

மேலும், அவர் முன்னாள் உலக அழகியும், தனது மனைவியுமான ஐஸ்வர்யா ராய் குறித்து கூறியிருப்பதாவது,

'ஐஸ்வர்யாவின் தொழில் பக்தி மற்றும் அர்ப்பணிப்பு குறித்து கேள்விக்கு இடமில்லை. 2 வயது மகள் ஆராத்யாவை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டு அன்புடன் வளர்த்துவரும் ஐஸ்வர்யா, ஒரு மிகச் சிறந்த தாயாக விளங்குகிறார். ஒரு இணை நடிகராக, அவருடன் பணியாற்றுவதை மிகவும் விரும்புகிறேன். இது எனக்கு மிகுந்த சந்தோஷமே.

திரை உலகத்திலிருந்து மகள் ஆராத்யாவை பாதுகாக்கவே நானும், ஐஸ்வர்யாவும் விரும்புகிறோம். குழந்தையின் பெற்றோராக மகள் ஆராத்யா, ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவே நாங்கள் இருவரும் விரும்புகிறோம். ஊடகங்கள் மற்றும் திரை பத்திரிக்கைகளில் இருந்து நான் பாதுகாக்கப்பட்டேன்.

எனக்கு 18 வயது இருக்கும்போது, முதலாவதாக திரைப்பத்திரிக்கை ஒன்றில் வந்தேன். எனவே நட்சத்திரங்களின் குழந்தைகளை புகைப்படம் எடுப்பதிலிருந்து ஊடகங்கள் கட்டுப்பாடு காட்ட வேண்டிக்கொள்கிறேன்' என என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ்..-இலவசமாய படிக்க விருப்பமா.?




இன்றைய சூழலில் பிளஸ் டூ படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கனவு பொறியியல் படிப்பில் சேர்ந்து, எப்படியாவது சாப்ட்வேர் துறையில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான். இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மீதான மோகம் மாணவர்கள் மத்தியில் குறைந்துவிடவில்லை. ஆனால் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றால்தான், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் உறுதி என்று சொல்லும் அளவுக்கு மருத்துவப் படிப்பில் சேரக் கடுமையான போட்டி நிலவுகிறது.


0.5இல் எம்பி.பி.எஸ். வாய்ப்பைத் தவறவிடும் மாணவ-மாணவிகள் அநேகம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல லட்சங்களைக் கொட்டிச் சேருவது என்பது எல்லா மாணவர்களாலும் இயலாத காரியம்.இப்படிப்பட்ட நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பை இலவசமாக வழங்கி, கையோடு ராணுவத்தில் டாக்டர் வேலையையும் வழங்குகிறது.


மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மொத்தம் 130 இடங்கள் உள்ளன. 105 இடங்கள் மாணவர்களுக்கும், 25 இடங்கள் மாணவிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.


அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வு, ராணுவ மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வைச் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. 2014ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ. அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு http://aipmt.nic.in/aipmt/Welcome.aspx என்ற இணையதளத்தில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.


ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேரப் பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண் தேவை. வயது 17 முதல் 22க்குள் இருக்க வேண்டும். ராணுவ மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியானதும், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.


இந்த ஆன்லைன் தேர்வில் ஆங்கிலம், லாஜிக்-ரீசனிங் பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்வி கேட்கப்படும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இறுதியாக 130 பேர் எம்.பி.பி.எஸ். படிப்புக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களின் படிப்புக்கான அனைத்துச் செலவையும் பாதுகாப்பு அமைச்சகமே ஏற்றுக்கொள்கிறது. டியூஷன் கட்டணம், விடுதி, உணவு வசதி, புத்தகம், சீருடை அனைத்தும் இலவசம். படிப்பு செலவுகளுக்காகத் தனியாகக் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.


4 அரை ஆண்டு மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு மராட்டிய மருத்துவப் பல்கலைக்கழகம் எம்.பி.பி.எஸ். பட்டம் வழங்கும். ராணுவ மருத்துவமனைகளில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் முடித்ததும் ராணுவ மருத்துவப் பிரிவில் அதிகாரி அந்தஸ்துடன் மருத்துவர் பணியில் நியமிக்கப்படுவார்கள்.


ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வு, அனைத்து வசதிகளும் உண்டு. ராணுவ மருத்துவக் கல்லூரியில் படிப்பவர்கள் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளாவது ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அதன் பிறகு தொடர்ந்து பணியாற்ற விரும்பினால் பணியைத் தொடரலாம்.


2014ஆம் ஆண்டுக்கான ராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும். இதுதொடர்பான முழு விவரங்களை அக்கல்லூரியின் இணையதளத்தில்( http://afmc.nic.in/) மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் மருத்துவப் படிப்புகள்...!




உயிர்காக்கும் புனிதத் தொழிலாக கருதப் படும் மருத்துவத்தில் சிறப்புப் பிரிவுகளில் சேருவதற்கு புத்திசாலித்தனமும், நல்ல கல்வியறிவும் மட்டும் போதாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் பணம் ஒரு முக்கியக் காரணியாக தற்காலத்தில் விளங்குகின்றது.


முதுநிலை பட்டப்படிப்பு பிரிவுகளில் அதிகப் பணம் அளிக்க முன்வருவோருக்கே அனுமதி என்ற நிலையே பரவலாகக் காணப்படுகின்றது.அதிலும் ஒரு மருத்துவக் கல்லூரியின் அரங்கத்தில் நிர்வாகக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கூட்டத்தில் அதிக விலை கொடுப்பவருக்கே அவர் விரும்பும் பிரிவில் அனுமதி கிடைக்கின்றது என்ற தகவல் வெளியாகியுள்ளது..

சென்னையில் சிறந்து விளங்கும் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் ரேடியாலஜி பிரிவில் முதுநிலைப் படிப்பிற்கான அனுமதி 4 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே பிரிவு பெங்களூரு மருத்துவக் கல்லூரிகளில் 3 அல்லது 3.5 கோடிக்கு கிடைக்கின்றது. எலும்பு மற்றும் தோல் மருத்துவத்திற்கான உயர்கல்வி அனுமதி ஒன்றிலிருந்து ஒன்றரை கோடியாக இருக்கின்றது. குழந்தை மருத்துவத்திற்கான அனுமதி 1.6 கோடிக்கு கிடைக்கின்றது.


ஒரு மருத்துவக் கல்லூரியின் அரங்கத்தில் நிர்வாகக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கூட்டத்தில் அதிக விலை கொடுப்பவருக்கே அவர் விரும்பும் பிரிவில் அனுமதி கிடைக்கின்றது. இத்தகைய முறை பெற்றோர்களுக்குமே திருப்தி அளிக்கவில்லை. இதுபோல் ஏல முறையில் அனுமதி கிடைப்பது சொத்துகளை வாங்குவதுபோல் இருக்கின்றது. அதுபோல் பணம் கொடுக்க இயலாத பெற்றோர்களின் பிள்ளைகளே எதிர்காலத்தில் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர்கள் கருதுகின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் ரேடியாலஜி பிரிவிற்கு விண்ணப்பிக்கும் போது மொத்தம் 683 சீட்டுகளே அந்தப் பிரிவில் உள்ளன. மாணவர்களின் தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையே பெரும் இடைவெளி இருக்கின்றது. இந்தப் பற்றாக்குறை செலவினத்தை அதிகரிக்கின்றது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.


இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் முதுநிலைப் படிப்பிற்கான இடங்களை அதிகரிக்கும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை என்று கல்லூரி தரப்பு நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும்போது நிர்வாக செலவு அதிகரிப்பதால் அதனை ஈடுகட்ட அனுமதிக் கட்டணம் அதிகரிக்கின்றது என்பது அவர்கள் தரப்பு கருத்தாகும்.

நியூசிலாந்து தொடரில் இந்திய அணி: யுவராஜ்சிங் சிங் மிஸ்ஸிங்!



இந்திய அணி வரும் ஜனவரி 19 ஆம் தேதி நியூசிலாந்தில் நடைபெறும் ஒரு நாள் போட்டி தொடரில் கலந்து கொள்கிறது.


அங்கு 5 ஒரு நாள் போட்டியிலும், இரண்டு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கிறது. இதில் பங்கற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

 
இந்த தொடரில் அதிரடி வீரர் யுவராஜ்சிங் தேர்வு செய்யப்படவில்லை. அறிமுக வீரர் ஈஸ்வர் பாண்டே ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளார். மற்றொரு அறிமுக வீரர் பின்னி ஒரு நாள் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளார்.


வரும் ஜனவரி மாதம் நியூசிலாந்து செல்ல உள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த ஒரு நாள் போட்டி தொடர் ஜனவரி 19ம் தேதி நேப்பியரில் துவங்க உள்ளது.


இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


 இந்த போட்டியில் தோனி, ஷிகார் தவான், ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, ராஹானே, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, இஷ்வர் பாண்டே, வருண் ஆரோன், ஸ்டுவர்ட் பின்னி ஆகியோர் அடங்கிய இந்திய அணி விளையாட உள்ளது.

முதல் பெண் நீதிபதி நியமனம் -பாகிஸ்தானின் புரட்சி..!



பாகிஸ்தானில் இஸ்லாமிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் ஷரியா நீதிமன்றம் கடந்த 1980 ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராக இருந்த ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானிய நிறுவனங்களை இஸ்லாமிய திட்டங்களுக்கு மாற்றும் விதமாக இந்த நீதிமன்றத்தை தோற்றுவித்தார். குற்றவியல் சட்டங்களுக்கு இணையாக இஸ்லாமிய மதத்தில் காணப்படும் ஹுடூட் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நீதிமன்றம் இயங்கி வருகின்றது.

நேற்று இந்த நீதிமன்றத்திற்கு புதிய பெண் நீதிபதி நியமிக்கப்பட்டார்.

தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணி புரிந்துவந்த அஷ்ரப் ஜெஹான்(56) கராச்சியில் உள்ள இந்த நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

கடந்த 33 வருடங்களில் இஸ்லாமிய நீதிமன்றத்திற்கு ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். பத்திரிகையாளர்களிடம் அரிதாகவே பேசும் ஷரியத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஆகா ரபிக் அஹமது இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்விற்காக தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

திறமையான பெண்ணான அஷ்ரப் இஸ்லாமிய நீதிமன்றத்தில் இணைந்துள்ளார். ஆண், பெண் என்ற பிரிவினை இஸ்லாமிய சட்டத்தில் இல்லை. அதனால் ஒரு பெண் நீதிபதி இங்கு செயல்படுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தான் இதற்கான முதல் முயற்சியை எடுத்து உலகம் முழுமைக்கும் தங்களது முற்போக்கான எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், தங்கள் நாட்டினரைப் பற்றிய பல தவறான கருத்துகள் இந்த நடவடிக்கை மூலம் மாறக்கூடும் என்றும் அவர் கூறினார்.